ஆழமான கருத்துருவாக்கங்களை மேற்கொள்ளும் கேலிச்சித்திரம்

20 September 2017

reality world
கல்வி, சமூகம், மொழி, மதம்,இனம் என்ற எல்லைக்கோடு தாண்டி ஆழ்ந்த அர்தபூர்வமான கருத்துக்களை பெரும் திரளான மக்களிடம் கொண்டு சேர்ப்பதாக கேலிச்சித்திரங்கள் கானப்படுகின்றன.ஒரு புத்தகம், கட்டுரை,ஆசிரியர் தலையங்கம், பத்தி எழுத்து, தேர்தல் விஞ்ஞாபனங்கள் ஏற்படுத்தாத தாக்கத்தை கேலி சித்திரங்கள் செய்யும் ஆற்றல் மிக்கன. மக்களில் பெரும்பாலானவர்களின் ரசனை கேலி, கிண்டல், மட்டம்தட்டல், நக்கல்,நையாண்டி போன்றன காணப்படுகிறது. 100000 வார்த்தைகளில் புத்தகம் ஊடாக கூறுவதை கேலிச்சித்திரம் ஊடாக இலகுவாக கூறமுடியும்.கேலி சித்திர தொடக்க வரலாற்றினை பொறுத்தத மட்டில் அமெரிக்கா வே காணப்படுகிறது. 16ம் நூற்றாண்டு அச்சு ஊடக வரலாற்றின் திருப்புமுனையான காலப்பகுதியாகும்.அக்காலத்திலே கேலிச்சித்திரங்கள் மக்களின் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தின.அமெரிக்க ஊடகத்துறை வரலாற்றில் முதலாவது கேலி சித்திரத்தை வரைந்துள்ளார்.இங்கிலாந்து தேசத்திற்கு எதிராக பல புரட்சியை ஏற்படுத்தும் கேலிச் சித்திரங்களை வரைந்தார்.பவுல் ரெவரே என்பவர் லிங்கன் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 1000 கணக்கில் கேலி சித்திரத்தை வரைந்தார்.அக் காலத்தில் கேலிச்சித்திரங்கள் பிரபலமானது. அத்துடன் மஞ்சள் இதழியல் என்ற சொல்லாடலும் அறிமுகமானது.கேலிச் சித்திரங்களின் தாக்கம்,விரைவுத்தன்மை போன்றன கனதியானது.சாதாரண கல்வி கன்கார்டியா பாமரனாலும் அரசியல் திருகுதாளங்களை இலகுவாக புரிந்து கொள்ள முடிகின்றது.இது கேலிச்சித்திரத்தின் சாதமான பலம்.கேலிச்சித்திரங்கள் அரசியல், பொருளாதாரம், சமூகம், விளையாட்டு என அனைத்து துறையிலும் உண்டு. கேலிச்சித்திரங்களினை யாழ்ப்பாண தமிழ் பத்திரிகைகள் தெற்கு ஊடகங்களிடம் இருந்து கடன்வாங்கியே பிரசுரம் செய்கிற தன்மையை கடந்த கால பத்திரிகைகளில் அவதானிக்க முடிந்தது. ஆயினும், சிங்கள மற்றும் ஆங்கில மொழி பத்திரிகைகளில் கேலிச்சித்திரங்கள் பிரதான இடம் பிடித்தன.கொழும்பில் இருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகைகளில் கேலிச்சித்திரங்களை அவதானிக்க முடிந்தது. கேலிச்சித்திரங்கள் ஊடக அறம் என்ற போர்வையில் தணிக்கைக்குழு உட்படுத்தும் செய்திகளை இலகுவாக நாசூக்காக குறியீட்டு முறையியல்கேலிச்சித்திரங்கள் கூறிவிட்டு செல்கின்றன. இது கேலிச்சித்திரத்தின் பலம்.ஆக்கம்:உங்கள் நண்பன் 

                                                                                                                                                                                                                --இ.தனஞ்சயன்--