ட்விட்டரில் மோதிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி - சதீஷ்!

21 September 2017

அஜய்

 

இரண்டு நகைச்சுவை நடிகர்கள் பொதுவெளியில் மோதிக்கொண்டால் எப்படி இருக்கும்?

தமிழ்சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகர்களான ஆர்ஜே பாலாஜி, சதீஷ் ஆகிய இருவரும் ட்விட்டர் தளத்தில் கருத்து மோதலில் ஈடுபட்டு பரபரப்பை உண்டாக்கியுள்ளார்கள். 

ஆர்ஜே பாலாஜியின் ரசிகர்களுடனான கலந்துரையாடலில் ஒரு ரசிகர், உங்களுக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் யார் என்று கேட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த ஆர்ஜே பாலாஜி, சதீஷ். ப்ளீஸ் என்னை நம்புங்கள் என்றார். 

இந்தப் பதில் தன்னைக் கேலி செய்வதாக எண்ணிய சதீஷ் உடனே இதற்குப் பதிலளித்தார். ஹா.. ஹா.. ப்ரோ, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் கடைசி நாளில் நீங்கள் வெளியிட்ட வீடியோவை விடவா? ப்ளீஸ்... என்னை நம்புங்கள் என்றார். 

இது பாலாஜி - சதீஷ் இடையேயான கருத்து மோதலாக உருவெடுத்தது. அடுத்ததாக சதீஷுக்குப் பதில் அளித்த பாலாஜி, நல்ல பஞ்ச். இதுல பாதியாவது படத்துலயும் பண்ணீங்கனா நல்லா இருக்கும். குட் லக் நண்பா என்றார். 

இதையடுத்து பதில் அளித்த சதீஷ், தேவை இல்லாமல் இதை ஆரம்பித்த நண்பருக்குக் கீழே கமெண்ட்ஸ் மூலமாக பதில் அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. முற்றுப்பெற்றது என்று இந்த விவாதத்தை முடித்துவைத்தார்.