நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று சொன்னாரா ஐஸ்வர்யா ராய்?

21 September 2017

அஜய்

ஐஸ்வர்யா ராய் பச்சன் ஃபேனி கான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும் முன்னரே ஹீரோவுடன் மிக நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.

height=

அதுல் மஞ்ரேகர் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன், அனில் கபூர், ராஜ்குமார் ராவ் ஆகியோர் நடித்து வரும் பாலிவுட் படம்தான் ஃபேனி கான். இந்தப் படத்தில் ராஜ்குமார் ராவ் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்கிறார். அனில் கபூர் பாடகராக நடிப்பதுடன் சொந்தக் குரலில் ஒரு பாடலும் பாடுகிறார்.

இந்தப் படத்தில் ஹீரோவுடன் மிக நெருக்கமான காட்சியிலும் நடிக்க மாட்டேன் என்ற நிபந்தனையுடன்தான் ஐஸ்வர்யா ராய் நடிக்க ஒப்புக்கொண்டதாக ஒரு தகவல் பாலிவுட் மீடியாவில் வெளிவந்தது.

height=

இதற்கு முன்னர்  ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் ஐஸ்வர்யா ராய் தன்னை விட வயதில் இளையவரான ரன்பிர் கபூருடன் சேர்ந்து சில நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார். அது அவர் குடும்பத்தில் சில பிரச்னைகளை ஏற்படுத்தியது, அதிலும் அவர் மாமியார் ஜெயா பச்சன் வெளிப்படையாகவே தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஃபேனி கான் படத்தை ஒப்புக் கொள்ளும் தருவாயிலேயே இயக்குனரிடம் இது குறித்து தெளிவாக பேசியிருந்தாராம் ஐஸ்வர்யா.

height=

ஐஸ்வர்யா ராயிடம் இது குறித்து கேட்ட போது ஒரு படத்தில் நடிக்கும் போது இயக்குனர் நம்மை எப்படி நடத்துகிறார் என்பது மிகவும் முக்கியம். அதை வைத்தே அப்படத்தில் நம்முடைய பங்களிப்பு அமையும். கரன் ஜோஹரின் படம் ஏ தில் ஹை முஷ்கில் நாயகி சபா விவாகரத்தான சுதந்திரமான பெண்.  தனக்கு என்ன தேவை என்பதை தெளிவாகத் தெரிந்திருப்பவள். இது ஒன்றும் தவறல்ல. தவிர என்னுடைய கதாபாத்திரம் எனக்கு நன்றாகவே தெரியும்.

height=

இத்தனை காலம் திரைத்துறையில் நடித்து வருகிறேன். அது தந்த நிதானம் என்னிடம் உண்டு. ஒரு காட்சியை எப்படி எடுத்தால் அது சரியாக வரும் என்பதும் எனக்குத் தெரியும். ஒரு கதாபாத்திரத்தை எப்படி அணுகுவது என்பதை இந்த 20 வருட கால சினிமா வாழ்க்கையில் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளேன். இப்படத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் எதுவும் தவறாக இருக்கவில்லை. கண்ணியமான அழகியலுடன் தான் எடுக்கப்பட்டுள்ளது. மலினமான உணர்ச்சிகளை தூண்டுபவையாக நிச்சயம் இல்லை’ என்றார் ஐஸ்வர்யா.

height=

சமீபத்தில் அமிதாப் பச்சன் 22-வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் பேசியபோது, ​​இந்திய சினிமாவில் பெண்களின் சித்தரிப்பு குறித்த மாறும் சூழ்நிலையை பாராட்டிப் பேசினார். ஐஸ்வர்யா நடித்திருந்த ஏ தில் ஹை முஷ்கில் பட வசனத்தை அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார்.