கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகர் ஜெய் கைதாகி விடுதலை!

21 September 2017

அஜய்

 

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகர் ஜெய் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இன்று அதிகாலை, நடிகர்கள் ஜெய் மற்றும் பிரேம்ஜி ஆகிய இருவரும் மந்தைவெளியிலிருந்து அடையாறு நோக்கி காரில் பயணம் செய்துள்ளார்கள். இந்நிலையில் ஜெய் ஓட்டிய அந்த கார், சென்னை அடையாறு மேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கியபோது ஜெய் நிதானம் இல்லாமல் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் இந்த விபத்தில் காயமின்றித் தப்பினார்கள். 

இதையடுத்து குடிபோதையில் கார் ஓட்டியதாக ஜெய் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்தது. அதோடு அவர் பயணித்த காரையும் பறிமுதல் செய்தது. பிறகு ஜெய், சொந்த ஜாமீனில் விடுதலை ஆனார்.