கமலின் உறுதி இறுதிவரை தேவை: நடிகர் விவேக் கருத்து

24 September 2017

reality world

அரசியலுக்கு வருவதாக தெரிவித்துள்ள கமலின் உறுதி இறுதிவரை இருக்க வேண்டும் என்று நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் சூழல் குறித்து கமல்ஹாசன் பல்வேறு கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “தமிழகத்தை மிகப் பரிதாபமான நிலைக்கு அரசியல்வாதிகள் தள்ளியிருக்கின்றனர். இத்தகைய சூழலில் நான் அரசியலுக்கு வரத் தயார்; தேவைப்பட்டால் முதல்வராகவும் தயார்” என்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில், “அரசியலுக்கு வருவதை உறுதி செய்த கமலின் மனத்திண்மையைப் பாராட்டுகிறேன். இந்த உறுதி இறுதிவரை இருக்க நேர்மையாளரின் சார்பில் வாழ்த்துகிறேன். வருவது யாராக இருப்பினும், வாழ்த்துவது மரபாக இருப்பினும், மகுடம் தரிக்க வைப்பது மக்களே’’ என்று குறிப்பிட்டுள்ளார்.