நல்லாட்சியிலும்...... அதே நிலைதானோ?

24 September 2017

reality world

சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைத் தபால் திணைக்களம் எந்தெந்த முஸ்லிம் முக்கியஸ்தர்களின் முகங்களை முத்திரைகளில் பதித்துள்ளது என்பதைக் காண்பிக்கும் பதிவொன்றை வெளியிட்டது ஒருவேளை உங்களுக்கும் நினைவிருக்கலாம்!

அவ்வேளையில் அனேகர் அந்த முத்திரைகளைத் தவிர முஸ்லிம்களுக்கு முக்கியத்துவமான வேறெந்த நிகழ்வுகளைச் சிறப்பிக்கத் தபால் முத்திரைகள் வெளியாகியுள்ளன என்பது பற்றியும் தகவல் தருமாறு கேட்டிருந்தார்கள்!

அதற்கமைய இலங்கை சுதந்திரம் பெற்ற 1948. 02.04 முதல் 2014. 12. 31 வரையான காலப்பகுதிக்குள் வெளியான முஸ்லிம் சமுகம்சார் நிகழ்வுகளுக்கு மதிப்பளித்து வெளியிடப்பட்ட தபால் முத்திரைகளைக் கீழே வரிசைப்படுத்துகிறேன் ;

1968. 10. 14 
திருக்குர்ஆன் அருளப்பட்ட 1400 ஆண்டு நிறைவு விழா சிறப்பு முத்திரை! இதுவே இலங்கையில் முஸ்லிம் சமூகத்தினர் தொடர்பில் வெளிவந்த முதல் முத்திரை எனக் கருதலாம்!

1979. 11. 22 
ஹிஜ்ரி 15 ஆம் நூற்றாண்டு ஞாபகார்த்த முத்திரை

1984.12.24 
வெலிகாமம் பாரி அரபு க்கல்லூரி நூற்றாண்டு விழா

1985. 10. 17 
புனித அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு வெளியீடு

1992. 10. 24 
காலி அல் பஹ்ஜதுல் இஸ்லாமிய்யா அரபுக்கல்லூரி 
நூற்றாண்டு விழா

2000. 09. 16

அகில இலங்கை YMMA பேரவை 
50 ஆண்டு நிறைவு

2002. 07. 26 
அகில இலங்கை ரிபாய் தரீக் சங்க 125 ஆண்டு நிறைவு

2003.06. 08 
இலங்கையில் அராபியர் முதன்முதலாக பேருவளையில் 
குடியேறியமை குறித்து முதல் பள்ளிவாயிலான மஸ்ஜிதுல் அப்ரார் பொறிக்கப்பட்ட இரண்டு ஞாபகார்த்த முத்திரைகள்!

2004. 01. 06 
சீனன்கோட்டை ஷாதுலிய்யத்துல் பாஸிய்யா தரீக்கா சிறப்பு முத்திரை 
2013. 12..02 
அகில இலங்கை சோனகர் சங்க நூற்றாண்டு

மேலே உள்ள பட்டியலைப் பார்க்கும் போது முஸ்லிம்சமூகம்சார் தபால் முத்திரைகள் போதியளவு வெளியாகவில்லை என்பது புலனாகிறது!

நல்லாட்சியிலும்...... 
அதே நிலைதானோ?

                                  - mahdy hassan lbrahim