நியூயார்க்கில் பிரியங்கா சோப்ராவைச் சந்தித்தார் நயன்தாரா!

26 September 2017

அஜய்

 

பிரபல நடிகைகள் நயன்தாராவும் பிரியங்கா சோப்ராவும் நியூயார்க்கில் சந்தித்து உரையாடியுள்ளார்கள்.

ஐ.நா. அமைப்பின் குளோபல் கோல்ஸ் விருது நிகழ்ச்சிக்காக நியூயார்க் சென்றுள்ளார் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா. அதேபோல இயக்குநர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக அவருடன் நியூயார்க் சென்றுள்ளார் நயன்தாரா .

இந்நிலையில் பிரியங்கா சோப்ராவும் நயன்தாராவும் நியூயார்க்கில் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்கள். இந்தச் சந்திப்பின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நயன்தாராவைப் பாராட்டி இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ட்வீட்டில், மை டியர் சன்ஷைன் என்று நயன்தாராவை வர்ணித்திருந்தார். பிரியங்கா சோப்ராவுடனான சந்திப்பில், சன்ஷைன் கேர்ள் என்கிற வாசகம் கொண்ட உடையை அணிந்திருந்தார் நயன்தாரா.