ரஜினி அரசியலுக்கு வந்தால் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம்: லதா ரஜினிகாந்த்

03 October 2017

அஜய்

ரஜினி அரசியலுக்கு வந்தால் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம்: லதா ரஜினிகாந்த் 

  

 

ரஜினி அரசியலுக்கு வந்தால் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அப்போது ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவர் பேசியதாவது: 

அரசியலுக்கு வருவது குறித்து அவருக்குத்தான் தெரியும். அரசியலுக்கு வருவது குறித்து விரைவில் அறிவிப்பார். அவர் அரசியலுக்கு வந்தால் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அரசியலுக்கு வந்தால் எல்லா நல்ல விஷயங்களையும் செய்வார். நல்லது செய்வதற்கான 100 திட்டங்கள் அவருடைய மனதில் இருக்கும் என்றார்.