இனி நான் தனி ஆள் இல்லை: நடிகை தன்ஷிகா உருக்கம்!

03 October 2017

அஜய்

இனி நான் தனி ஆள் இல்லை: நடிகை தன்ஷிகா உருக்கம்!

 

 

எழுத்தாளர் மீரா கதிராவன் இயக்கும் ‘விழித்திரு’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் டி.ராஜேந்தர், தன்ஷிகாவும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய தன்ஷிகா டி.ராஜேந்தர் பெயரை குறிப்பிட மறந்துவிட்டார். இதையடுத்து பேச வந்த டி.ராஜேந்தர் தன்னுடைய அடுக்கு மொழியில் சபை நாகரீகம் தெரியவில்லை என நடிகை தன்ஷிகா குறித்து பேச மேடையிலேயே தன்ஷிகா சிறிது நேரம் கண் கலங்கினார். இந்தச் சம்பவம் தமிழ்த் திரையுலகிலும் சமூகவலைத்தளங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. 

தன்ஷிகாவைக் கண்டித்து பேசிய டி.ராஜேந்தருக்கு விஷால் கண்டனம் தெரிவித்தார். மேடையில் இந்த இயக்குநர் வெங்கட் பிரபுவும் தன்னுடைய விளக்கத்தை அளித்துள்ளார். மேடையில் இருந்த இதர நடிகர்களான கிருஷ்ணா, விதார்த் ஆகியோரும் தன்ஷிகாவுக்கு ஆதரவாகப் பதிவுகளை எழுதியுள்ளார்கள்.

இந்நிலையில் கடந்த 4 நாள்களாகச் சமூகவலைத்தளங்களில் அமைதி காத்த தன்ஷிகா, தற்போது ட்விட்டரில் கூறியதாவது: 

இனிமேல் நான் தனி ஆள் கிடையாது. எனக்கு எல்லோரும் உள்ளார்கள். எல்லோருடைய கருத்துகளையும் வாசிப்பதனால் நான் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளேன் என்று கூறியுள்ளார்.