சித்தார்த் - ஆண்ட்ரியா நடிக்கும் அவள்

03 October 2017

அஜய்

 

நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் மூன்று மொழிகளில் வெளிவரவுள்ளது. 

மிலிந்த் இயக்கத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா நடித்துள்ள படம் - அவள். இதுதான் சித்தார்த்தின் அடுத்தப் படம். இணை தயாரிப்பு - சித்தார்த். இப்படத்துக்கு ஹிந்தியில் தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர் என்றும் தெலுங்கில் க்ருஹம் என்றும் தலைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. 

இந்தப் படம் மூலமாக தெலுங்கு மற்றும் ஹிந்தியில் மீண்டும் நடித்துள்ளார் சித்தார்த். 2013-க்குப் பிறகு சித்தார்த் இவ்விரு மொழிகளிலும் எந்தவொரு படமும் நடிக்கவில்லை. கடந்த மூன்று வருடங்களாக, குறிப்பாக ஜிகர்தண்டா படத்துக்குப் பிறகு வரிசையாகத் தமிழில் நடித்து வந்தார் சித்தார்த். இந்நிலையில் தற்போது மீண்டும் ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் நடிக்க முன்வந்துள்ளார். இயக்குநர் மிலிந்த், காதல் டூ கல்யாணம் என்கிற தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படம் இதுவரை வெளிவரவில்லை. 

அவள், நவம்பரில் வெளியாகவுள்ளது.

src=