ஜனநாயக ஆட்சியைக் காப்பாற்றிய போதிலும் அது குறை காணப்படாத, பூரணமானதாக அமையவில்லை - எதிர்க்கட்சித் தலைவர்

03 October 2017

reality world
பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வதும் அதனை வெளிப்படைத்தன்மையுடன்  மதிப்பளிப்பதுமே உண்மையான ஜனநாயகத்தின் அடிப்படையாக அமைய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும்; தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
 
பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இடம்பெற்ற விசேட பாராளுமன்ற அமர்வில்; உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் கடந்த 70 வருட காலமாக நாங்கள் தேர்தல் முறையூடாக ஜனநாயக ஆட்சியைக் காப்பாற்றி வந்திருக்கின்றோம் என்றாலும், அது குறை காணப்படாத, பூரணமானதாக இருக்கவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட போது இடம்பெற்ற  நிகழ்வு, கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் நடைபெற்றது. அப்பொழது நான் இளம் சிறுவன். இதற்குச் சென்றிருந்த நான் அதனை மிகவும் பெருமையுடன் அவதானித்த  அந்த நாளை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித்தலைவர் ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் நாங்கள் ஐக்கியமான மக்களாக இருந்தோம். அன்று  இலங்கையின் எல்லா மக்களும் இன, மத வேறுபாடுகளின்றி ஒன்றிணைந்து  வெளிநாட்டு ஆட்சியிலிருந்து சுதந்திரத்திற்காக பாடுபட்டோம். உண்மையில் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் டொமினியன் அந்தஸ்தை விரும்பாது முழுமையான சுதந்திரம், வேண்டுமென்று தமிழ்மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்திருந்ததையும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்hர்.
 
நாட்டை வெகுவாகப் பாதிப்புக்குள்ளாக்கிய நீண்டகால ஆயுதப் போராட்டத்தையும், கிளர்ச்சிகளையும் நாம் கண்டுள்ளோம்.  இதனால்  மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களே. அவர்கள் தமது அடையாளத்தையும், கௌரவத்தையும் காப்பாற்றிக்கொள்ள நீண்டகாலப் போராட்டங்களை நடாத்தி வந்துள்ளனர். ஆனால்  ஆயுதப் போராட்டத்திற்கான காரணங்களாக அமைந்த விடயங்கள் தீர்வின்றி இன்னமும் தொடருகின்றது என்று சுட்டிக்காட்டிய எதிர்கட்சி தலைவர் விரைவாகத் தீர்வு காணப்பட வேண்டிய அவசியத்தையும் தமது உரையின் Nபுhது வலியுறுத்தினார்.
.
ஐக்கியமான, பிளவுபடாத, பிரிக்க முடியாத நாட்டில் ஐக்கியப்பட்ட மக்களாக முன்னோக்கிச் செல்லவே எமது மக்கள் முயற்சிக்கின்றனர். இந்த விடயத்தில் ஏற்காமை எதுவும் இருக்கும் என நான் எண்ணவில்லை. இலங்கை வெற்றியடைய வேண்டும் என்ற விருப்பம் நிறைவேற வேண்டுமாயின், அந்தக் குறிக்கோளை அடைய நாம் அனைவரும் ஒன்றிணைந்து  செயற்பட வேண்டும் எதிர்க்கட்சித் தலைவரும்; தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.