அரிசியை மொத்தமாக குறைந்தவிலையில் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

04 October 2017

reality world

சதொச ஊடாக குறைந்த விலையில் அரிசியை மொத்தமாக விநியோகிக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகின்றது.

சதொசவிற்கு உட்பட்ட நாடுமுழுவதிலுமுள்ள மாவட்டங்களில் உள்ள 28 மத்திய நிலையங்களில் அரிசி இவ்வாறு மொத்தமாக விநியோகிக்கப்படும் என்று சதொசவின் தலைவர் டி .ரி. எம். கே. பி. தென்னக்கோன் தெரிவித்தார்.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைவாக புறக்கோட்டை மொத்த அரிசி சந்தை விலையிலும் பார்க்க குறைவாக இந்த அரிசி விநியோகிக்கப்படும் என்று சதொச தலைவர் தெரிவித்தார்.