குளிர்ச்சியா இருக்கே ....

04 October 2017

அஜய்

குளிர்ச்சியா இருக்கே  ............


குளிர்ச்சியா இருக்கே! 
----------- 

உலோகப் பாத்திரங்களில் வைத்திருக்கும் தண்ணீர் அதே வெப்பநிலையில் இருக்கும்போது, மண்பானையில் வைத்திருக்கும் தண்ணீர் மட்டும் குளிர்ச்சியாக இருப்பது ஏன் தெரியுமா? குட்டீஸ்... 

மண்பானையில் இருக்கும் நீரின் குளிர்ச்சி அதன் ஆவியாதல் என்னும் செயல்பாட்டினாலேயே ஏற்படுகிறது. உலோகப் பாத்திரங்களைப் பொறுத்தவரை அப்பாத்திரம் மேற்புறம் திறந்திருந்தால் மட்டுமே நீர் ஆவியாகிறது. ஆனால், மண்பாண்டங்களில் பக்கச் சுவர்களில் மெல்லிய துளைகள் காணப்படுகின்றன. அத்துளைகளின் வழியே நீர் ஆவியாகிறது. நீர் ஆவியாவதற்கான வெப்பம் மண்பாண்டத்திலுள்ள நீரிலிருந்தே பெறப்படுகிறது. இது இயற்பியல் கொள்கை ஆகும். 

இதை வெயில் காலங்களில் நமது உடலிலேயே உணர முடியும். வெயில் காலங்களில் நமக்கு வியர்வை தோன்றுவது இயற்கை. அவ்வேளையில் மின் விசிறி காற்று நம் உடலின் மீது படும் போதும் நாம் சற்று அதிக குளிர்ச்சியாக உணர்கிறோம். காரணம் நம் உடலின் மீதுள்ள வியர்வை ஆவியாவதற்கான வெப்பம் நம் தோலிலிருந்தே ஈர்க்கப்படுவதால், நாம் குளிர்ச்சியாக உணர்கிறோம்.