துர்நாற்றம்

04 October 2017

அஜய்

துர்நாற்றம்

துர்நாற்றம் 
------------ 

குப்பைத் தொட்டியில் எந்த வகைக் குப்பைகளை போட்டு வைத்தாலும், அதன் துர்நாற்றம் ஒரே மாதிரி தோன்றுவது ஏன்? 

பொதுவாக குப்பைத் தொட்டியிலிருந்து வீசும் துர்நாற்றத்திற்குக் காரணம், குப்பையில் ஏற்படும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் ஆகும். இவை ஒருவித கரிம வேதிப் பொருட்களை வெளியேற்றுவதால் அந்த துர்நாற்றம் ஏற்படுகிறது. 

குப்பை ஈர நிலையில் இருக்கும் போது இந்த துர்நாற்றத்தை நாம் அதிகம் உணர முடியும். வெவ்வேறு வாசனையுள்ள பொருட்களாக இருப்பினும், அவற்றை உண்ணும் நுண்ணுயிர்கள் வெளிப்படுத்தும் துர்நாற்றம் ஒரே மாதிரி இருப்பது போல நாம் உணருகிறோம். 

வீடுகளிலுள்ள குப்பைத் தொட்டி களில் பாஸ்டருல்லா பெஸ்டிஸ் பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிர்களே அதிகம் உருவாகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வகை பாக்டீரியாக்கள் குறிப்பிட்ட பிளேக் நோயைப் பரப்புவதால் அவற்றை உடனடியாக அகற்றிவிடுவது நல்லது.