ஃபுகுஷிமா அணு உலைகளை மீண்டும் இயக்க அனுமதி

04 October 2017

அஜய்

ஃபுகுஷிமா அணு உலைகளை மீண்டும் இயக்க அனுமதி


ஜப்பானில் கடந்த 2011-ஆம் ஏற்பட்ட விபத்து காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஃபுகுஷிமா அணு உலைகளை மீண்டும் இயக்க, அந்த நாட்டின் அணுசக்தி அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஜப்பானில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட 9 ரிக்டர் அளவிலான, சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக மிகப் பெரிய சுனாமி ஏற்பட்டது. 
இதில், அந்த நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஃபுகுஷிமா டாய்சி அணுமின் நிலைய அணு உலைகளின் குளிரூட்டும் அமைப்பு பழுதடைந்தது.
இதன் காரணமாக, அந்த அணு உலைகளின் வெப்பம் அதிகரித்து அவை உருகி வெடித்தன. இதன் காரணமாக அந்தப் பகுதி முழுவதும் அணுக்கதிர் வீச்சால் நாசமானது.
கடந்த 1986-ஆம் ஆண்டில் ரஷியாவின் செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு, உலகின் மிக மோசமான அணு விபத்து இது என்று கூறப்படுகிறது.
ஃபுகுஷிமா அணு உலை விபத்தையடுத்து, மின்சாரத் தேவைக்கு அணு சக்தியையே பெரும்பாலும் நம்பியிருந்த ஜப்பான், அனைத்து மின் நிலையங்களையும் மூடியது.
இந்த நிலையில், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குப் பின் அந்த நாட்டின் ஒரு சில அணு உலைகளை மீண்டும் திறக்க அனுமதி வழங்கிய பிறகு, தற்போது ஃபுகுஷிமாவின் இரண்டு அணு உலைகளையும் இயக்குவதற்கான அனுமதியையும் ஜப்பானின் அணுசக்தி அமைப்பு புதன்கிழமை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.