ஹிட்லர் பயன்படுத்திய உடை, உலக உருண்டை: ஏலத்தொகை எவ்வளவு தெரியுமா?

04 October 2017

அஜய்

ஹிட்லர் பயன்படுத்திய உடை, உலக உருண்டை: ஏலத்தொகை எவ்வளவு தெரியுமா?

|  

 

ஜெர்மன் நாட்டு சர்வாதிகாரியாகத் திகழ்ந்தவர் அடோல்ஃப் ஹிட்லர். இவர் பயன்படுத்திய உலக உருண்டை, உடை உள்ளிட்டவை அமெரிக்காவில் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது.

2-ஆம் உலகப் போரின் போது ஜெர்மனியில் உள்ள ஹிட்லரின் இல்லத்தில் இருந்து மே 10-ந் தேதி 1945-ல் அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவரால் ஹிட்லர் பயன்படுத்திய உலக உருண்டை, உடை உள்ளிட்டவை எடுக்கப்பட்டது.

அந்த உலக உருண்டையானது, மரத்தாலான அடித்தளத்தில் அமைக்கப்பட்டிருந்தது. உலக உருண்டையானது உலோகத்தால் அமைந்திருந்தது. இது, 12 இஞ்ச் பரப்பளவும், 18 இஞ்ச் உயரமும் கொண்டது. 

இந்த உலக உருண்டையில் ஜெர்மனியின் எல்லையோரங்கள் குறிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 1939-ம் வருடம் நடைபெற்ற சோவியத் யூனியன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த வரைபடம் அமைக்கப்பட்டிருந்தது. 

ஹிட்லர் பயன்படுத்திய இந்த உலக உருண்டை தற்போது 65,000 டாலர்களுக்கு அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டது. 

அதுமட்டுமல்லாமல் அதே சமயத்தில் எடுத்து வரப்பட்ட ஹிட்லர் பயன்படுத்திய போர் உடை ஒன்றும் (அதில் அடோல்ஃப் ஹிட்லர் என்பதை குறிக்கும் விதமாக ஏ. ஹெச். என்று பதியப்பட்டிருக்கும்) 10,000 டால்ரகளுக்கு ஏலம் போனது.