2017-ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு கூட்டாக அறிவிப்பு!

04 October 2017

அஜய்

2017-ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு கூட்டாக அறிவிப்பு! 


 

ஸ்டாக்ஹோம்: அடிப்படை மூலக்கூறுகளின் அமைப்பை பற்றி ஆய்வு செய்தமைக்காக  2017-ஆம் ஆண்டு  வேதியியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசுகள் சற்று முன்பு அறிவிக்கப்பட்டுள்ளன.ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில், நோபல் பரிசுக் குழுத் தலைவர் தாமஸ் பெர்ல்மன் அதனை அறிவித்தார்.

இந்த ஆண்டுக்கான வேதியியல் துறை நோபல் பரிசினை ஜேக்கஸ் டிபோட்சே, ஜோஸ் பிராங் மற்றும் ரிச்சர்ட் ஹெண்டர்சன் ஆகிய மூன்று விஞ்ஞானிகள் பெற உள்ளனர். இவர்கள் முறையே அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஸ்விட்சலாந்தினைச் சேர்ந்தவர்களாவார்கள். விருதுத் தொகையான ரூ.7 கோடி இவர்கள் மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது 

அடிப்படை மூலக்கூறுகளின் அமைப்பை பற்றி ஆய்வு செய்தமைக்காக  தற்பொழுது மேலே கூறிய மூன்று விஞ்ஞானிகளுக்கும் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.