நான் விரும்பும் பெண்மை

09 October 2017

அஜய்

நான் விரும்பும் பெண்மை

நான்

நான் விரும்பும் பெண்மை ........ 

அன்பிலும் ஊர் ஆளுமை வேண்டும் 
அரணாய் என் கரம் பிடிக்க ............ 
கோபம் கொணர்ந்திடும் புன்னகை வேண்டும் 
கள்வனாய் அவளை தீண்டிடும் வேளையிலும் ....... 
வெறுப்பாய் அவள் நடித்திட வேண்டும் 
என் தனிமை யாதென நான் உணர்ந்திட .........
மழலையாய் பிடிவாதம் வேண்டும் 
என் கொஞ்சல் பிடியை நான் காட்டிட ........... 
நகைப்பாய் சிறு கண்ணீர் வேண்டும் 
அவள் கனவுகளை நான் கண்டிட ........ 
தடுமாறிடும் வாய்ப்பும் வேண்டும் 
என்னவள் மடிசாய்ந்து கண்ணீர் சிந்திட ..........
புன்னகையிலே என் மரணம் வேண்டும் 
அவள் கண்ணீர் கோலம் காணும் முன்னே ........... 
இவையாவும் வேண்டும் ஒருமித்த பேரின்பமாய் 
என்னவள் கொண்டுள்ள பெண்மையிலே ................