சட்டமா? சதியா?

10 October 2017

காவியா
ராஜீவ் காந்தியை கொலை செய்தனர் என்ற பெயரில் எம் இரத்த பந்தங்கள் 25 ஆண்டுகளைக்கடந்து சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். அதே இந்தியாவின், தேசபிதா என வர்ணிக்கப்பட்ட மகாத்மா காந்தியை சுட்டுக்கொலை செய்தவர் கோட்சே. இது உலகறிந்தது. இந்த கோட்சே RSS அமைப்பினைச் சேர்ந்தவர். அப்போதிருந்த சாபக்கர் தான் காந்தியை கொல்வதற்கு முன்னோடியாய் இருந்தவர். இதே இந்தியாவின் பாராளுமன்றத்தில் காந்தியின் புகைப்படத்துக்கு நேரே சாபக்கரின் புகைப்படத்தினை மாட்டி அழகு பார்த்தார் வாஜ்பாய். இன்று RSS இந்தியாவையே ஆட்சி செய்கின்றது. என்னங்கசார் உங்க சட்டம்?????