வடமாகாணத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் - அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடு

10 October 2017

reality world

வடமாகாணத்தில் ஊடக நிறுவனங்களுடன் இணைந்து தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழழை (13) பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக அராசங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

நாமே ஆரம்பிப்போம் - டெங்குவை ஒழிப்போம்


அனைத்து ஊடக நிறுவனங்களுடனும் இணைந்து செயற்படுத்துகின்ற டெங்குவை ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டம்


நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு நோயினால் இன்று வரை பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளதுடன், பலர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுகாதார அமைச்சின் தரவுகளின் படி கடந்த ஒரிரு வாரங்களில் நாட்டின் வடமாகாணத்தில் டெங்கு நோய் அதிகமாக பரவியுள்ளதாக இணங்காணப்பட்டுள்ளது. மரண வீதமும் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட வட மாகாணத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.


இந்நிலைமையினை கவனத்திற் கொண்டு, ஜனாதிபதி செயலணி, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சுடன் இணைந்து அரசாங்க தகவல் திணைக்களமானது, அனைத்து ஊடக நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு வட மாகாணத்தில் பரவியுள்ள டெங்கு நோயினை ஒழிப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்றினை செயற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.


இத்தேசிய வேலைத்திட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று 2017.10.13 அன்று வெள்ளிக்கிழமை பி.ப.03.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.


எனவே, குறித்த கலந்துரையாடலில் உங்களது ஊடக நிறுவனத்தில் முடிவெடுக்கக் கூடிய அதிகாரி ஒருவரை கலந்து கொள்ளச் செய்யுமாறு பணிவாக வேண்டிக் கொள்கின்றேன்.


இது தொடர்பில் நீங்கள் தரும் ஒத்துழைப்பினை மேன்மையாக கருதுகின்றேன்.