மூவாயிரம் அசிரியர்களுக்கு நாளைமுதல்; இடமாற்றம்

11 October 2017

reality world

மூவாயிரம் அசிரியர்களுக்கு நாளை தொடக்கம் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
 
 
தேசிய பாடசாலைகளில் பத்து வருடங்களுக்கு மேலாக சேவையாற்றும் 12 ஆயிரம் ஆசிரியர்களில்   மூவாயிரம்  ஆசிரியர்களுக்கே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படவுள்ளது. 
 
 
கடந்த பல வருடங்களாக தேசிய இடமாற்றக் கொள்கை அமுலாகவில்லை. அதனை துரிதமாக நடைமுறைப்படுத்துமாறு கல்வி அமைச்சர் அகிரவிராஜ் காரியவசம் அதிகாரிகளை பணித்திருந்தார். 
 
 
இதன் பிரகாரம் ஆசிரியர்களுக்கு இரண்டு கட்டங்களின் கீழ் இடமாற்றம் வழங்கப்படும். முதல் கட்டத்தின் கீழ் ஜிசிஈ உயர்தர வகுப்புக்களில் கல்வி கற்பிக்கும் மூவாயிரம் பேர் நாளை தொடக்கம் இடமாற்றம் பெறுவார்கள்.
 
 
இரண்டாவது கட்டத்தின் கீழ், தரம் ஒன்று தொடக்கம் 11 வரையிலான வகுப்புக்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஒன்பதாயிரம் பேருக்கு இடமாற்றம் வழங்கப்படும். இந்த கட்டம் ஜனவரியில் அமுலுக்கு வர இருக்கிறது.